கட்டாந்தரையில் உறக்கம் - இளநீர் மட்டுமே ஆகாரம்: மோடியின் 11 நாள் விரதம்
கட்டாந்தரையில் உறக்கம் - இளநீர் மட்டுமே ஆகாரம்: மோடியின் 11 நாள் விரதம்
UPDATED : ஜன 18, 2024 08:22 PM
ADDED : ஜன 18, 2024 07:04 PM

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி 11 நாள் விரதத்தின் போது பிரதமர் மோடி கடைபிடித்து வருவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக, திறப்பு விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் கடும் விரதம் இருப்பதாக கடந்த 12ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
11 நாள் விரதத்தை துவங்கியது முதல், அன்றைய தினம் மஹாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோயிலுக்கு சென்ற மோடி பிரார்த்தனை செய்தார். அதற்கு முன்னர் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மோடி ஈடுபட்டார். பின் ஆந்திர மாநிலம், லேபக்ஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து கேரள மாநிலம் சென்ற பிரதமர் மோடி, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். ஜன.20ம் தேதி தமிழகத்தில் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கும் வருகை தர உள்ளார்.
இ்நிலையில் பிரதமர் மோடி தனது 11 நாள் கடும் விரதத்தின் போது வெறும் கட்டாந்தையில் படுத்து உறங்குவதாகவும், வெங்காயம், பூண்டு முதலியவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்த்து வருவதாகவும், தினமும் இளநீர் மட்டுமே அருந்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.