தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா

மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா

மருத்துவமனையில் எஸ்.எம்.கிருஷ்ணா


ADDED : அக் 19, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா, உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு, நடப்பாண்டு ஜூலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதம் சிகிச்சைக்கு பின், குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நேற்று காலை, அவரது உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. பெங்களூரின் பழைய விமான நிலையம் சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்து வருவதால், நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

துணை முதல்வர் சிவகுமார், மருத்துவமனைக்கு சென்று, கிருஷ்ணாவிடம் நலம் விசாரித்தார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர் கிருஷ்ணா, விரைவில் குணமடைய வேண்டும். தன் அன்றாட பணிகளை கவனிக்க வேண்டும் என, பிரார்த்திக்கிறேன்.

- பி.ஒய்.விஜயேந்திரா,

மாநில தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us