பா.ஜ., கொள்கையால் சிறு வணிகம் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு
பா.ஜ., கொள்கையால் சிறு வணிகம் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு
UPDATED : மே 29, 2024 02:57 PM
ADDED : மே 29, 2024 02:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குல்லு: ‛‛பாஜ., அரசின் கொள்கைகளால் சிறு வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் குல்லுவில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்களை பலப்படுத்த வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இத்துறை தான் உருவாக்குகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையில், வேலைவாய்ப்பு இல்லாத தலைமுறை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையை மாற்ற பா.ஜ.,வை அகற்ற வேண்டும்.
சிறு வணிகத்தை பா.ஜ.,வின் கொள்கைகள் சிதைத்துவிட்டது. பா.ஜ.,வின் கொள்கைகளால் சிறுவணிகம் பாதிக்கப்பட்டதுடன், கோடீஸ்வரர்களை பலப்படுத்துகிறது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.