UPDATED : மே 19, 2025 10:20 AM
ADDED : மே 19, 2025 12:14 AM

புதுடில்லி:கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன் ஏற்றுமதி, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்கள் ஏற்றுமதியை விடவும் அதிகமாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களான பெட்ரோலிய பொருட்கள் மற்றும் வைரங்களை விஞ்சும் அளவுக்கு இந்தியாவின் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி முன்னேற்றம் கண்டுள்ளது என்று அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்து, 2.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
![]() |
கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியில் இந்தியா அதிக வளர்ச்சியை பதிவு செய்த முதல் ஐந்து நாடுகள் அமெரிக்கா, நெதர்லாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் செக் குடியரசு. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி, அமெரிக்காவிற்கு 5 மடங்கும், ஜப்பானுக்கு 4 மடங்கும் அதிகரித்துள்ளது.
அரசின் பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தால் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.