இந்தியாவுடன் சுமூகமான உறவு: மாலத்தீவு தூதர் இப்ராஹிம் பேட்டி
இந்தியாவுடன் சுமூகமான உறவு: மாலத்தீவு தூதர் இப்ராஹிம் பேட்டி
ADDED : ஜன 31, 2024 02:03 PM

புதுடில்லி: இந்தியாவுடனான உறவு நன்றாகவும், சுமூகமாகவும் உள்ளது என மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாஹீப் தெரிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான மாலத்தீவில், அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதிபர் முய்சு அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டனர். எதிர்ப்பு கிளப்பியதால், அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் இந்தியா-மாலத்தீவு இடையேயான தூதரக உறவு பாதிப்படைந்தது.
இந்நிலையில், மாலத்தீவு தூதர் இப்ராகிம் ஷாஹீப் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பார்லிமென்ட் வந்தார். அப்போது இந்தியா-மாலத்தீவு உறவு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‛‛ இந்தியாவுடனான உறவு நன்றாகவும் சுமூகமாகவும் உள்ளது'' என இப்ராஹிம் ஷாஹீப் பதில் அளித்தார்.