தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

 சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

 சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை


ADDED : மார் 15, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலரும் காலநிலை செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் மீதான தடுப்பு காவலை நீக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஆறு மாதங்களுக்குப்பின் அவர் விடுதலையானார்.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரியும், அரசியலமைப்பின் 6வது அட்டவணையின்கீழ் அதை இணைக்கக்கோரியும் கடந்த ஆண்டு செப்டம்பரில் போராட்டம் தீவிரமடைந்தது.

இதில், அரங்கேறிய வன்முறையில் நான்கு பேர் பலியாகினர்; 22 போலீசார் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, போராட்டத்தை துாண்டியதாகக் கூறி, காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்து, வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் 17ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், சோனம் வாங்சுக் மீதான தடுப்புக் காவலை நீக்கியுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'லடாக்கில், அமைதியை நிலைநாட்டும் நோக்கில், சோனம் வாங்சுக் மீதான தேசிய பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை உடனே ரத்து செய்கிறோம்.

'அனைத்துத் தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவும், லடாக்கில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கை நிறைந்த சூழலை உருவாக்குவதில் உறுதியாக உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, சோனம் வாங்சுக் ஜோத்பூர் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us