மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்: கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்: கேரளாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
ADDED : டிச 12, 2024 01:10 PM

திருவனந்தபுரம்: 'எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவை தான். அதை விட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கேரள மாநிலம், வைக்கத்தில் ஈ.வெ.ரா., போராட்டம் நடத்திய இடத்தில் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வியில் முன்னேறிய மாநிலம். ஈ.வெ.ரா., நூலகம் அமைக்க உதவிய, கேரளா அரசுக்கு நன்றி. சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறோம்.
முற்போக்கான திட்டங்கள்
நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க முடியவில்லை. எல்லோருக்கும் எல்லாம் என்று அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் ஆட்சி ரீதியாகவும் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தை போலவே கேரளாவில் முற்போக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க முடியவில்லை. யாரையும் தாழ்த்தி பார்க்காத சமத்துவ எண்ணம் மக்கள் மனதில் வளர வேண்டும்.
பகுத்தறிவு
எல்லாவற்றையும் சட்டம் போட்டு மாற்றிவிட முடியாது. சட்டம் தேவை தான். அதை விட மக்களின் மனமாற்றம் மிகவும் முக்கியம். பகுத்தறிவு மற்றும் அரசியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பாகுபாடுகளுக்கு எதிரான நமது போராட்டத்தை தொடர வேண்டும். முன்பு இருந்ததை விட வேகமாக செயல்பட வேண்டும். நவீன வளர்ச்சியால் பாகுபாடுகளை நீக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வைக்கப் போராட்ட நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

