ADDED : அக் 09, 2024 08:14 PM
விக்ரம்நகர்:வரும் 2027ம் ஆண்டுக்குள் நகரின் மின்சாரத் தேவையில் 20 சதவிகிதம், சூரிய சக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதை ஆம் ஆத்மி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சூரிய சக்தி கொள்கை மறு ஆய்வுக்கூட்டத்தை முதல்வர் ஆதிஷி நேற்று முன்தினம் நடத்தினார். இந்த கூட்டத்தில் டில்லியின் மூன்று மின்வினியோக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது முதல்வர் ஆதிஷி பேசியதாவது:
சோலார் பேனல்களை நிறுவும் அனைத்து நுகர்வோருக்கும் ஒரு மாதத்திற்குள் மானியம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் நுகர்வோர் உற்பத்தி செய்யும் அதிகப்படியான மின்சாரத்துக்கு, ஏழு நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மானியங்களை மாற்ற வழிவகுக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற வகையில் மானிய வினியோகத்திற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
