ADDED : ஜன 22, 2024 07:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சூரியஒளி மூலம் எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வோம் என சோலார் மேற்கூரை மாதிரிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி தெரிவித்தார்.
'பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா' திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும் என மோடி அறிவித்திருந்தார். இதற்கான இன்று மாதிரிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து பிரதமர் மோடி ‛‛எக்ஸ்''தளத்தில் பதிவேற்றியதாவது, சூரிய ஒளி மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணம் குறைவது மட்டுமின்றி, எரிசக்தி துறையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வோம். இவ்வாறு மோடி ‛‛எக்ஸ்'' தளத்தில் பதிவிட்டுள்ளார்.