ADDED : ஆக 14, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரமுல்லா: ஜம்மு - காஷ்மீரின் அகல் வனப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணி, கடந்த 1 முதல் நடக்கிறது. அப்போது நடந்த சண்டையில், 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே பாரமுல்லா மாவட்டத்தின் உரி - சுருண்டா பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு வழியே பாக்., பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் நேற்று முன்தினம் ஊடுருவ முயன்றனர்.
இதை தடுக்க நம் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பயங்கரவாதிகளும் சுட்டனர். இதில், ராணுவ வீரர் அங்கித் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இது குறித்து நம் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உரி செக்டார் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது போல், 10 நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்றார்.