sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்

/

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு; ராணுவ வீரர் வீர மரணம்

6


ADDED : ஏப் 12, 2025 10:16 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:16 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்நுர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்த சண்டையில் பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரர் குல்தீப் சந்த் வீரமரணம் அடைந்தார்.

இது பற்றிய விவரம் வருமாறு:

அடர்ந்த காட்டுப்பகுதியான கெரி பட்டால் பகுதியில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதை ரோந்து பணியில் இருந்து ராணுவத்தினர் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரர் குல்தீப் சந்த் என்பவர் வீர மரணம் அடைந்தார். தொடர் துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்து பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, அடர் வனப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. பிப்.11ம் தேதி இதே பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி ஒருவரும், 2 வீரர்களும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us