ADDED : மே 04, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., படையில் முனீர் அகமது என்பவர் பணியாற்றி வந்தார். இவர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அப்போது தான், மேனல் கானை, முனீர் அகமது திருமணம் செய்தது தெரிய வந்தது.
திருமணத்தை மறைத்ததுடன், பாக்., பெண்ணை விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்க வைத்த குற்றச்சாட்டின் கீழ், பணியில் இருந்து முனீர் அகமதுவை நீக்கி, சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை நேற்று உத்தரவிட்டது.