" விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் " - பிரதமர் மோடி உறுதி
" விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் " - பிரதமர் மோடி உறுதி
ADDED : பிப் 22, 2024 09:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள விவசாய சகோதர சகோதரிகளின் நலன் தொடர்பான ஒவ்வொரு பிரச்னையும் நிறைவேற்ற பா.ஜ., அரசு உறுதிபூண்டுள்ளது.
கரும்பு கொள்முதல் விலையில் வரலாற்று சிறப்புமிக்க உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் நமது கரும்பு உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.