சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி
சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் பலனே முக்கியம்: துணை ஜனாதிபதி
ADDED : ஆக 17, 2024 06:09 PM

நெல்லூர்: நாட்டில் சிலருக்கு நாட்டு நலனை விட அரசியல் நலனே முக்கியமாக உள்ளது'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள சிலர் பொருத்தமற்ற காரணங்களுக்காக நாட்டு நலனை விட அரசியல் நலனை முன்னிறுத்தி உள்ளனர். அதில் இருந்து மீண்டு புத்திசாலிகளாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக வேண்டி கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி தியாகம் செய்தவர்களிடம், அவர்கள் பாடம் படிக்க வேண்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.
நேற்று தேசிய சட்டப்பல்கலை மாணவர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசும் போது, '' நாட்டின் அரசியலமைப்பு பதவியில் உள்ள ஒருவர், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார்'' என ராகுலை மறைமுகமாக விமர்சித்து பேசியிருந்தார்.