sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்

/

சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்

சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்

சொத்து, பென்ஷனுக்காக 80 வயது தாயை 11 மாதம் வீட்டில் சிறை வைத்த மகன்

2


ADDED : பிப் 18, 2024 06:20 AM

Google News

ADDED : பிப் 18, 2024 06:20 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: கர்நாடகாவின் துமகூரு டவுன் சிரா கேட் சதேபுராவைச் சேர்ந்தவர் பங்கஜாக் ஷி, 80; அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

பங்கஜாக் ஷிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பிள்ளைகள்; அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

மூத்த மகனான சுரேஷ், மருமகள் ஆஷா மற்றும் பேரக் குழந்தைகளுடன் பங்கஜாக் ஷி வசித்தார்.

கடந்த 11 மாதங்களாக பங்கஜாக் ஷியை, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் பார்க்கவில்லை. இது குறித்து கேட்டபோது, மற்ற பிள்ளைகள் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்று சுரேஷும், ஆஷாவும் கூறி வந்தனர்.

இந்நிலையில், சுரேஷுன் வீட்டின் வளாகத்தில் உள்ள சிறிய அறையில் பங்கஜாக் ஷி சிறை வைக்கப்பட்டிருப்பது பற்றி, உறவினர்களுக்கு தெரிய வந்தது.

இது குறித்து, மூத்த குடிமக்கள் உதவி மையம் சார்பில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

நேற்று காலை மாவட்ட சட்டப் பணிகள் சேவை ஆணைய நீதிபதி நுாருன்னிசா, மூத்த குடிமக்கள் உதவி மைய அதிகாரிகள், சுரேஷ் வீட்டிற்கு சென்றனர். பங்கஜாக் ஷி சிறை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

அவர் இருந்த அறை அசுத்தமாக இருந்தது. கிழிந்த உடையுடன் கட்டிலில் பரிதாபமாக பங்கஜாக் ஷி படுத்திருந்தார். அவரை அதிகாரிகள் மீட்டனர்.

“என் பெயரில் உள்ள 12 வீடுகள், மாத பென்ஷன் 50,000 ரூபாய் மற்றும் சொத்துகளை அபகரிக்க, 11 மாதங்களாக மகனும், மருமகளும் சேர்ந்து என்னை சிறை வைத்துள்ளனர்,” என, அதிகாரிகளிடம் பங்கஜாக் ஷி கூறினார்.

ஆனால், உடல்நிலை சரியில்லாததால், அவரை தனி அறையில் வைத்து கவனித்ததாக மகன் கூறினார். அதிகாரிகள் நம்பவில்லை. சுரேஷையும், ஆஷாவையும் கடுமையாக எச்சரித்தனர்.

'இனி இதுபோன்று செய்தால், உங்கள் இருவரையும் கைது செய்வோம்' என, போலீசார் எச்சரித்தனர். பங்கஜாக் ஷிக்கு தைரியம் கூறி போலீசார் புறப்பட்டுச் சென்றனர்.

பாலாற்றில் மணல் திருட்டு படாளத்தில் மூவர் கைது

மதுராந்தகம்: படாளம் அருகே பிலாப்பூர் பாலாற்று படுகையில், மணல் திருட்டில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், படாளம் அடுத்த பிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த கடா என்கிற நாகராஜ், 30, தினேஷ், 26, குமரவேல், 29, ஆகிய மூவரும், நேற்று பிலாப்பூர் பாலாற்று படுகையில், டாடா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்த முயன்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூவரையும் கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பின், வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைத்தனர்.

சிறுவனுக்கு தொந்தரவு வாலிபருக்கு ‛'போக்சோ'

சென்னை: சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்த 14 வயது சிறுவன், உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரீஸ், 24, என்பவர், சிறுவனிடம் பழக்கமாகி உள்ளார்.

நேற்று முன்தினம், சிறுவனை தனியாக அழைத்துச் சென்ற ஹரீஸ், சிறுவனை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து சிறுவன், உறவினர்களிடம் கூறினார்.

அவர்கள், ஹரீசை சரமாரியாக தாக்கி, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஹரீசை கைது செய்தனர்.

ரூ.40 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத் தில் மகளிர் குழுவிற்கு கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 6 ஆண்டாக தலைமறைவாக இருந்த கடலுார் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜ் 50, என்பவரை போலீஸ் தனிப்படையினர் கைது செய்தனர்.

நத்தம் பகுதியை சேர்ந்தவர் மாயழகன் மனைவி நந்தினி தேவி. இவர், திண்டுக்கல் -- மதுரை ரோட்டில் எஸ்.ஆர் நகரில்உள்ள எர்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை மகளிர் சுய உதவிக்குழு கடனுக்காக 8 ஆண்டுகளுக்கு முன் அணுகினார். மகளிர் குழு, வீடு லோன் தருகிறோம். அதற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணம் கட்ட வேண்டும் என டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நந்தினி தேவி பொதுமக்களிடம் ரூ.40 லட்சம் வரை வசூல் செய்து கட்டி உள்ளார். ஆனால் நிர்வாகம் 2 ஆண்டாக லோன் வாங்கி தராமல் இழுத்தடித்துள்ளது. திடீரென நிறுவனமும் மூடப்பட்டு தொடர்பு அலைபேசி எண்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த நந்தினி தேவி திண்டுக்கல்எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி செய்த கடலுார் மாவட்டம் ராமநத்தத்தை சேர்ந்த செல்வராஜை 50, கைது செய்னர்.

விசாரணையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் எர்த் டிரஸ்ட் நிறுவனம் நடத்தியதும், பல பேரிடம் ரூ. கோடி கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதன் பின் ஜாமினில் வந்த அவர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இந்த வழக்கு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

செல்வராஜை கைது செய்ய ஏ.டி.ஜி.பி. பாலநாகதேவி, ஐ.ஜி., சத்திய பிரியா, எஸ்.பி., கல்யாண்உத்தரவுப்படி டி.எஸ்.பி., குப்புசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அலைபேசி சிக்னல்படி அவரை தேடினர்.

சென்னை குரோம்பேட்டை அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. 2017 தலைமறைவான செல்வராஜை 6 ஆண்டுகளுக்கு பின் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.

போலீசார் கூறுகையில்,'திண்டுக்கல்,தேனி மாவட்டத்தில் எர்த் ட்ரஸ்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் திண்டுக்கல் நேருஜி நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்யலாம்' என்றனர்.

அலைபேசியில் ஆபாசம்: அங்கன்வாடி ஊழியர்களிடம் சிக்கிய தொழிலாளி

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம்சிங்கம்புணரி, எஸ்.புதுார், திருப்புத்துார், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு சமீப காலமாக குறிப்பிட்ட அலைபேசி எண்களில் இருந்து ஒருவர் ஆபாசமாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு பிப்.,26ல் அடுத்தடுத்து ஒருவர் போன் செய்து ஆபாசமாக பேசி உள்ளார். இதைத்தொடர்ந்து அவரை தாங்களே பிடிக்க முடிவுசெய்தனர்.

இதன்படி ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் சித்ரா தலைமையில் அந்த நபரிடம்பேசி அவரது இருப்பிடத்தை அறிந்தனர். பிறகு இரவோடு இரவாக அவரை திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் முன் பிடித்து நேற்று காலை உலகம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

அவர் கல்லல் அருகே கீழப்பூங்குடியை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி ராஜேந்திரன்53, என்பது தெரியவந்தது.

அவரது அலைபேசியையும் ஊழியர்களிடம் அவர் பேசிய உரையாடல்களின் பதிவுகளையும் போலீசில் ஒப்படைத்தனர்.

பெண் கழுத்தறுத்த கும்பல் பார்லரில் புகுந்து அட்டூழியம்

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில் சின்னக்கடை தெருவில், ஜோஷினி என்ற பியூட்டி பார்லர் செயல்படுகிறது. செங்கத்தை சேர்ந்த சுதா, 35, பணிபுரிகிறார்.

நேற்று மதியம், 12:00 மணியளவில் ஒரு கும்பல் பார்லருக்குள் புகுந்து, சுதாவின் முகம் மற்றும் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பியது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்து ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டவுன் போலீசார், 'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

'பார்சல் புக்கிங்' முறைகேடு தபால் ஊழியர்கள் மீது வழக்கு

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில், தபால் பார்சல் சர்வீஸ் செயல்படுகிறது.

இந்த அலுவலகத்தில் நடந்த தணிக்கையில், 2017 அக்டோபர் முதல், 2018 மே வரை, முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக கட்டணத்தை குறைத்து, 'புக்கிங்' செய்ததில் தபால் பிரிவுக்கு, 7.51 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

சேலம் ஆர்.எம்.எஸ்., உதவி தபால் கண்காணிப்பாளர் பாலாஜி புகாரின்படி, சூரமங்கலம் போலீசார் விசாரித்தனர். இதன் அடிப்படையில் தபால் பிரிவு ஊழியர்கள் அனிதாகுமாரி, சக்தி, சண்முகப்பிரியா, ராஜகோபால், சுதர்சன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியிடம் அத்துமீறல் ஆசிரியருக்கு 'போக்சோ'

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேச்சேரி, புக்கம்பட்டி ஊராட்சி பூசாரிவளவு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஜியா உல் - ஹக், 44; ஓமலுாரில் மனைவி, மகன், மகளுடன் வசிக்கிறார்.

பள்ளியில் ஒரு மாணவியிடம், மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி, மேட்டூர் மகளிர் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, 'போக்சோ' சட்டத்தில், அவரை நேற்று கைது செய்தனர்.

ரயில் மறியல்: 55 விவசாயிகள் கைது

தஞ்சாவூர்: இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரும் மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஆதரவாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் நேற்று தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்தனர்.

போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் தடுப்புகளை மீறி உள்ளே நுழைந்து, சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன், உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

புலிகள் அமைப்பை புனரமைக்க ஆயுதம் கடத்திய சினிமா பிரமுகர் மீது குற்றப்பத்திரிகை

சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்பை புனரமைக்க, பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கடத்திய வழக்கில் கைதான, சினிமா பிரமுகர் ஆதிலிங்கம் மீது, என்.ஐ.ஏ., அதிகாரி கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த, 2021ல் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கடற்பகுதியில், மர்ம படகு ஒன்றை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கினர்.

துப்பாக்கிகள்

அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், 9 எம்.எம்., ரக துப்பாக்கியில் பயன்படுத்தும், 1,000 தோட்டாக்கள் இருந்தன.

இவற்றை பறிமுதல் செய்து, இலங்கையை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.

விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்பை புனரமைக்க, பாகிஸ்தானில் இருந்து ஈரான் மற்றும் கேரளா வழியாக, இலங்கைக்கு போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் குணசேகரன், புஷ்பராஜா எனும் பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின் உள்ளிட்டோர், இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்கு மூளையாக, சென்னை வளசரவாக்கத்தில் பதுங்கி இருந்த, விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவில் செயல்பட்ட சபேசன் எனும் சற்குணம், சேலையூரில் தங்கி இருந்த முன்னாள் ராணுவ வீரரும், சினிமா பிரமுகருமான ஆதிலிங்கம், 43, ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.

ஹவாலா ஏஜன்ட்

ஆதிலிங்கம், நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியிடம், சில மாதங்கள் மேலாளராக பணிபுரிந்து உள்ளார். ஹவாலா பண ஏஜன்டாகவும் செயல்பட்டு வந்த ஆதிலிங்கம், சினிமா படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் இவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், 2023 ஆகஸ்டில் கைது செய்தனர். இவர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்






      Dinamalar
      Follow us