தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குடிக்க பணம் தராத மகன் கொலை: தந்தை கைது

குடிக்க பணம் தராத மகன் கொலை: தந்தை கைது

குடிக்க பணம் தராத மகன் கொலை: தந்தை கைது


ADDED : பிப் 01, 2024 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: மது குடிக்க பணம் தர மறுத்ததால், தலையில் கல்லைப் போட்டு மகனைக் கொன்ற, தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

ராம்நகர் கனகபுரா அருகே ஒசஹள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 58. இவரது மகன் கோவிந்தராஜ், 33. திருமணம் ஆகவில்லை. கூலி வேலை செய்தார். குடிபோதைக்கு அடிமையாகி இருந்த நாகராஜ், தினமும் மது குடித்துவிட்டு மனைவி, மகனுடன் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மது குடிக்க பணம் தரும்படி, மகனிடம், தந்தை கேட்டார். பணம் கொடுக்க மறுத்ததால், தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது.

அதன் பின்னர் நாகராஜ் அங்கிருந்து தப்பிவிட்டார்.

நள்ளிரவில் வீட்டிற்கு வந்தவர், வீட்டின் திண்ணையில் துாங்கிக் கொண்டிருந்த, மகன் தலையில் கல்லை துாக்கிப் போட்டுவிட்டு தப்பினார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், வழியிலேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார். நேற்று காலை கனகபுரா போலீஸ் நிலையம் சென்று, நாகராஜ் சரண் அடைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us