தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வயதான பெற்றோரை கொடுமைப்படுத்திய மகனுக்கு 2 மாதம் சிறை

வயதான பெற்றோரை கொடுமைப்படுத்திய மகனுக்கு 2 மாதம் சிறை

வயதான பெற்றோரை கொடுமைப்படுத்திய மகனுக்கு 2 மாதம் சிறை


UPDATED : மே 23, 2026 10:01 PM

ADDED : மே 23, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 10:01 PM ADDED : மே 23, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: தெலுங்கானாவில் வயதான பெற்றோரை கொடுமைப்படுத்திய மகனுக்கு, உள்ளூர் நீதிமன்றம் இரண்டு மாத சிறைத்தண்டனை மற்றும் 50 ரூபாய் அபராதம் விதித்தது.

தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள நம்பள்ளியைச் சேர்ந்தவர் சீனிவாஸ், 44. தனியார் நிறுவன ஊழியரான இவர், 70 வயதைக் கடந்த தன் பெற்றோரை கடந்த ஓராண்டாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பெற்றோர், தங்கள் மகன் மீது நாராயணகுடா போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.

இதையடுத்து, சீனிவாஸ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 115ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரித்த அவர்கள், நம்பள்ளியில் உள்ள சிறப்பு நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாஸ்கர், சீனிவாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை மற்றும் 50 ரூபாய் அபராதம் விதித்தார். இதைத்தொடர்ந்து, சீனிவாஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us