உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 26, 2026 02:19 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, 79, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.
பருவநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக அவர் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தெரிவித்தார்.
வயிறு மற்றும் சிறுநீர் பாதையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் மருத்துவ பரிசோதனைக்காக, ஓரிரு நாட்கள் வரை அவர் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
