UPDATED : மே 13, 2026 07:31 PM
ADDED : மே 13, 2026 07:22 PM

குருகிராம்:ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில், காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காங்., - பார்லி., குழு தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் தாயாருமான சோனியா, 79, ஹரியானாவின் குருகிராமில் உள்ள, 'மேதாந்தா தி மெடிசிட்டி' மருத்துவமனையில் (மே 13) காலை சில மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிறப்பு டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ள அவருக்கு, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச்சில், கடுமையான காய்ச்சல் காரணமாக, டில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
