ADDED : ஜூன் 08, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிம்லா : காங்., - பார்லி., குழு தலைவர் சோனியா, 78, தன் மகளும், எம்.பி.,யுமான பிரியங்கா உடன், ஹிமாச்சலில் உள்ள சிம்லாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதாகவும், வழக்கமான பரிசோதனைகளுக்கு பின், அவர் வீடு திரும்பியதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் ஓய்வெடுக்கும்படி சோனியாவை டாக்டர்கள் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.