ADDED : பிப் 01, 2024 07:07 AM

தங்கவயலின் கட்ட காமதேனஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது பெத்தபள்ளி கிராம ஏரி. விவசாயம், கால்நடைகள், வீட்டு உபயோகத்தின் தண்ணீர் தேவைக்காக, மத்திய அரசின் 'அம்ருத் சரோவர்' என்ற திட்டத்தில் ஏரியை சீரமைக்க, கோலார் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து முன் வந்தது.
இதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சி.எஸ்.ஆர்., நிதி என்ற 'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி' திட்டத்தில் 60 லட்சம் ரூபாய் ஒதுக்க முடிவு செய்தது.
இப்பணியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023மார்ச்சில் துவக்கிவைத்தார்.
இப்பணியை் 2023 ஆகஸ்ட்க்குள் முடிக்க திட்டமிடப் பட்டது. முதற் கட்டமாக 39 லட்சத்து 2,606 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பங்கார்பேட்டையை சேர்ந்த வெங்கட் ரெட்டி என்ற ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப் பட்டது.
பெத்தப்பள்ளி ஏரி சீரமைப்பில், ஏரியின் எல்லையை குறிக்க வரிசையாக கற்கள் நடப்பட்டது.
கருவேல முட்செடிகள், புல் பூண்டுகள் அகற்றப்பட்டன. கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. ஜே.சி.பி., இயந்திரம் பயன்படுத்தி துார்வாரப்பட்டது.
இதுவரை 70சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் தண்ணீர் வரவில்லை. வெறும் கட்டாந்தரையாகவே காணப்படுகிறது. மழைநீரை தான் எதிர்ப்பார்க்கின்றது.
நீர்ப்பாசனத்துக்கு உதவி
பெத்தப்பள்ளி ஏரி பணிகள் முடிவடைந்தால் பெத்தபள்ளி, கொத்துார், ராக்கடப்பள்ளி, சின்னஹள்ளி கிராமங்களில் சிறு பாசனத்துக்கு உதவியாக இருக்கும். கால்நடைகளுக்கு மகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
கேசவ ரெட்டி,
வளர்ச்சி திட்ட அதிகாரி,
கட்ட காமதேனஹள்ளி கிராம பஞ்சாயத்து.
ஏரி நிரம்பினால் பயன்
தங்கவயல் தாலுகா வறட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது. பெத்தப் பள்ளி ஏரி, 9.19 ஏக்கர் கொண்டது. இதனை ஒட்டியுள்ள ஏரி, கால்வாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஏரியில் வந்து சேரும். ஏரி நிரம்பினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கிருஷ்ண மூர்த்தி,
பெத்தப்பள்ளி
நிதி பற்றாக்குறை இல்லை
ஜில்லா பஞ்சாயத்து நேரடி பார்வையில் பணிகள் நடந்தன. முதற் கட்டமாக பணிகள் முடிந்துள்ளன. அடுத்தக்கட்ட பணிகளை ஜில்லா பஞ்சாயத்து தான் தீர்மானிக்கும். சி.எஸ்.ஆர்., நிதி என்பதால் நிதி பற்றாக்குறை ஏற்படாது. விரைவில் பெத்தபள்ளி ஏரி தயாராகும்.
-- மஞ்சுநாத், தலைமை அதிகாரி
தாலுகா கிராம பஞ்சாயத்து, தங்கவயல்.
பெத்தப்பள்ளிஏரி பணிகள்முடிவடைந்தால்பெத்தபள்ளி,கொத்துார், ராக்கடப்பள்ளி, சின்னஹள்ளிகிராமங்களில்சிறு பாசனத்துக்குஉதவியாக இருக்கும். கால்நடைகளுக்குமகவும் பயன்உள்ளதாகஇருக்கும்.- நமது நிருபர் -