2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு
2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு
ADDED : டிச 03, 2025 01:26 PM

ராய்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி டாஸ் ஜெயிக்காததால், தொடர்ந்து 20வது முறையாக டாஸை தோற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணி விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் இந்திய அணி டாஸ் தோற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால், தென் ஆப்ரிக்காகு கேப்டன் பவுமா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல, கேஷவ் மஹாராஜ் மற்றும் லுங்கி இங்டியும் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் விளையாடும் தென் ஆப்ரிக்கா, இந்திய அணியை வீழ்த்த போராடும். அதேபோல, டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வெற்றி பெற முயற்சிக்கும். எனவே, இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

