ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை
ADDED : நவ 15, 2026 01:36 PM

- நமது நிருபர்-
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது 15வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக, விண்ணில் இருந்து திரும்பி வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை ஏவுதளத்தில் இருந்த ராட்சத இயந்திரக் கரங்கள் மூலம் பத்திரமாகப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது 26 ஸ்டார்லிங்க் வி3 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. விண்கலம் பூமியை 14 முறை சுற்றி வந்து ஏவுதளத்திற்குத் திரும்பியது.
இது விண்வெளி வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
சுந்தர் பிச்சை வாழ்த்து
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் செய்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி இருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில், ''ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் இந்த பிடிப்பு இன்னும் அறிவியல் புனைகதை போலவே தோன்றுகிறது.
இதை நேரில் பார்ப்பது நம்பமுடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது. வாழ்த்துகள் ஸ்பேஸ்எக்ஸ்'' என குறிப்பிட்டுள்ளார். சுந்தர் பிச்சையின் பாராட்டுக்கு எலான் மஸ்க் 'நன்றி' என்று பதிலளித்துள்ளார்.
