தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இந்தியாவின் கடல்சார் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்தது ஸ்பெயின்

 இந்தியாவின் கடல்சார் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்தது ஸ்பெயின்

 இந்தியாவின் கடல்சார் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்தது ஸ்பெயின்


ADDED : ஜன 25, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் கடல் வரை உள்ள கடல்கள் அனைத்து நாடுகளும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஐ.பி.ஓ.ஐ., எனப்படும் 'இந்தோ - பசிபிக் ஓஷன் இனிஷியேட்டிவிஸ்' அமைப்பை 2019ல் துவக்கினார். இதில் விருப்பமுள்ள எந்த நாடும் இணையலாம்.

இந்த ஐ.பி.ஓ.ஐ.,யில் இணையும் நாடுகள் கடல் பாதுகாப்பு, பேரிடர் உதவி, கடல் வளங்களை பாதுகாத்தல் போன்றவற்றில் ஒத்துழைக்க வேண்டும். இந்த அமைப்பில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உட்பட, 25க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் நம் நாட்டுக்கு ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் வருகை தந்தார். டில்லியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியாவின் ஐ.பி.ஓ.ஐ., என்ற கடல் சார் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்ததற்கான ஆவணத்தை வழங்கினார். இது இந்தியாவின் தலைமையை உலக நாடுகள் அங்கீகரிப்பதை காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us