ADDED : பிப் 24, 2026 06:28 PM

கூடலுார்: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி கேரள மாநிலம் குமுளியில் ஹிந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆஸ்கார் 47. ஆண்டுக்கு இருமுறை கேரளா வருவதை 2010 முதல் வழக்கமாக வைத்துள்ளார். தேக்கடி மிகவும் பிடித்திருந்ததால் அங்கு தங்கி தமிழகம், கேரளாவில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்துள்ளார்.
ஆஸ்கார் மூலமாக ஹிந்து மத சடங்குகளை அறிந்துகொண்ட ஸ்பெயினின் செலியா 37, கடந்த 3 ஆண்டுகளாக கேரளா, தமிழக கோயில்களுக்கு வந்தார். ஹிந்து மத கலாசாரங்களால் ஈர்க்கப்பட்ட இருவரும் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். தொடர்ந்து குமுளி துர்கா கணபதி பத்திரகாளி கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். கோயில் நிர்வாகிகள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
தம்பதி கூறுகையில், ஹிந்து மத கலாசாரத்தின் மீது ஈடுபாடு கொண்டு ஹிந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். சில நாட்கள் தேக்கடியில் தங்கிவிட்டு ஸ்பெயின் செல்ல உள்ளோம் என்றனர்.

