தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சபாநாயகர் தேர்தல்: ஆதரவு அளிக்க ராகுல் நிபந்தனை

சபாநாயகர் தேர்தல்: ஆதரவு அளிக்க ராகுல் நிபந்தனை

சபாநாயகர் தேர்தல்: ஆதரவு அளிக்க ராகுல் நிபந்தனை


ADDED : ஜூன் 25, 2024 11:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2024 11:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கினால், ஆளுங்கட்சி நிறுத்தும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க தயாராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.

பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தரத் தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். வேட்பாளர் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகி உள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஆதரவு தர வேண்டும் என கார்கேவிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டார். ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்கு தரப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம்.

இது குறித்து மீண்டும் தொடர்பு கொள்வதாக கார்கேவிடம் ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால், இதுவரை அழைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிடம் மோடி ஒத்துழைப்பு கேட்கிறார். ஆனால், எங்கள் தலைவர் அவமானப்படுத்தப்படுகிறார். இவ்வாறு ராகுல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us