sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 'நகர்ப்புற நக்சல்' மொழியில் பேசுவதா? நெத்தியடி  காங்., ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு

/

 'நகர்ப்புற நக்சல்' மொழியில் பேசுவதா? நெத்தியடி  காங்., ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு

 'நகர்ப்புற நக்சல்' மொழியில் பேசுவதா? நெத்தியடி  காங்., ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு

 'நகர்ப்புற நக்சல்' மொழியில் பேசுவதா? நெத்தியடி  காங்., ராகுல் மீது மோடி மறைமுக தாக்கு

1


ADDED : பிப் 05, 2025 02:25 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:25 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி ''சிலர், 'நகர்ப்புற நக்சல்' பயன்படுத்தும் மொழியில் வெளிப்படையாகவே பேசுகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்று கூறுபவர்களால், நம் அரசியலமைப்பையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்துகொள்ள முடியாது,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பார்லி.,யில் நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக தாக்கிப் பேசினார்.

இதற்கு, லோக்சபாவில் நேற்றைய உரையின் போது பிரதமர் மோடி பதிலடி தந்தார். ஆனால் பேச்சின் எந்த இடத்திலும் ராகுலின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை.

பிரதமர் பேசியதாவது:

ஏழைகளின் குடிசைகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதை பொழுதுபோக்காக வைத்திருப்பவர்களுக்கு, பார்லிமென்டில் ஏழைகள் குறித்த பேச்சு, 'போர்' அடிக்கவே செய்யும்.

சட்டைப் பையில் அரசியலமைப்பு சட்டப் புத்தகத்துடன் சுற்றுபவர்களின் ஆட்சி காலத்தில், முஸ்லிம் பெண்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தனர் என்பது தெரியுமா?

'அர்பன் நக்சல்' என்றழைக்கப்படும், நகர்ப்புற நக்சல்கள் பேசும் பேச்சுக்களை சிலர் இன்று வெளிப்படையாகவே பயன்படுத்துகின்றனர். தேசத்துக்கு எதிராக போர் தொடுப்போம் என்கின்றனர். இவர்களால் அரசியலமைப்பையும், தேசத்தின் ஒற்றுமையையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

ஜாதி, மதம், இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி கணக்கெடுப்பு பற்றி பேசுவதை, சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். பா.ஜ., ஆட்சி காலத்தில், மருத்துவ படிப்பில் எஸ்.சி., வகுப்பினருக்கான ஒதுக்கீடு எண்ணிக்கை, 7,700லிருந்து, 17,000 ஆக அதிகரிக்கப்பட்டது.

பழங்குடியினருக்கான ஒதுக்கீடு, 3,800லிருந்து, 9,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீடு, 14,000லிருந்து, 32,000 ஆக உயர்த்தப்பட்டது.

அரசின் வெளியுறவு கொள்கையை பற்றி சிலர் பேசியுள்ளனர். அதில் ஆர்வமுள்ளவர்கள் 'ஜே.எப்.கே.,ஸ் பார்காட்டன் கிரைசிஸ்' என்ற புத்தகத்தை வாசிக்கவும். இந்த புத்தகம் வெளியுறவு கொள்கையில் நிபுணரான ஒருவரால் எழுதப்பட்டது.

அதில் வெளியுறவுத் துறையை கவனித்த நாட்டின் முதல் பிரதமர் பற்றிய குறிப்பு உள்ளது.

நாடு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்ட போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி உடன் நடந்த உரையாடல், வெளியுறவுக் கொள்கை என்ற பெயரில் என்ன மாதிரி ஆட்டம் ஆடினர் என்பது அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கெஜ்ரிவாலும் தப்பவில்லை

பிரதமரின் உரையில், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தப்பவில்லை. இன்று டில்லி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:சில தலைவர்கள் தங்கள் வீடுகளில் நவீன குளியலறை, ஆடம்பர குளியல் தொட்டி போன்ற வசதிகள் செய்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். நாங்களோ அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்வதில் கவனம் செலுத்துகிறோம். சில கட்சிகள் இளைஞர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய பேரழிவாக உள்ளன. சில அரசு திட்டங்கள் பணத்தை மிச்சம் செய்திருந்தாலும், அதை மாடமாளிகை கட்டுவதற்கு நாங்கள் பயன்படுத்துவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.



புத்தகத்தில் என்ன இருக்கு?

பார்லிமென்டில் நேற்று மோடி பேசியபோது அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. முன்னாள் அதிகாரி ஒருவர் எழுதிய, 'ஜே.எப்.கே.,ஸ் பார்காட்டன் கிரைசிஸ்: திபெத், தி சி.ஐ.ஏ., அண்ட் சீனா - இந்தியா வார்' என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசினார். அந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல்: கடந்த 1962ல் சீனா உடன் போர் நடந்த இக்கட்டான சூழலில் நேரு நடந்து கொண்ட விதம் பற்றி அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் சகோதரி பேட் கென்னடி மீதான நேருவின் ஆர்வம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல, நேருவும், மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் எட்வினா அடிக்கடி இந்தியாவுக்கு வந்து சென்றதாகவும், பிரதமர் இல்ல விருந்தினர் மாளிகையில் அவர் அடிக்கடி தங்கியதாகவும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கடந்த 1962 மார்ச்சில், கென்னடியும், அவரது மனைவி ஜாக்குலின் கென்னடியும் இந்தியாவுக்கு வந்தபோது, துாதரகம் சார்பாக தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், எட்வினா தங்கிச் செல்லும் விருந்தினர் மாளிகையில் தங்கும்படி ஜாக்குலினை நேரு வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.








      Dinamalar
      Follow us