ADDED : பிப் 14, 2025 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் வட்டார கல்வி அதிகாரி சயிதாபி அளித்த பேட்டி:
தங்கவயலில் கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிகளவு மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக கோலார் மாவட்ட கல்வித்துறை வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முறை தங்கவயலில் 54 உயர்நிலைப் பள்ளிகளில் 3,000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். அதிக தேர்ச்சிக்காக ஆசிரியர்களுடன் மாணவர்களின் பெற்றோரும் அதிக அக்கறை காட்ட வேண்டும். தேர்வுக்கான மாதிரி வினா - விடை வழங்கப்பட்டு பயிற்சி நடக்கிறது.
கல்வியில் சிறந்து விளங்கிய இடம் தங்கவயல் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.