sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடக தமிழர்களுக்கு சிறப்பு சலுகைகள்; கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு வலியுறுத்தல்

/

கர்நாடக தமிழர்களுக்கு சிறப்பு சலுகைகள்; கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு வலியுறுத்தல்

கர்நாடக தமிழர்களுக்கு சிறப்பு சலுகைகள்; கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு வலியுறுத்தல்

கர்நாடக தமிழர்களுக்கு சிறப்பு சலுகைகள்; கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு வலியுறுத்தல்


UPDATED : அக் 21, 2024 12:35 AM

ADDED : அக் 21, 2024 12:28 AM

Google News

UPDATED : அக் 21, 2024 12:35 AM ADDED : அக் 21, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரில் அரண்மனை மைதானத்தில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க கன்னடர் - -தமிழர் ஒற்றுமை மற்றும் கலாசார மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

மத்திய, மாநில அரசுகளுக்கு...


1. கர்நாடகத்தின் மொழி, நிலம், நீர், எல்லை, வேலைவாய்ப்பு போன்ற மாநில உரிமைகளை தற்காத்து கொள்ள கன்னடர்கள் முன்னெடுக்கும் எல்லா முயற்சிகளிலும் கர்நாடகத் தமிழர்கள் பெரும் துணையாக இருப்பர்.

3. கர்நாடகத்தில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில், அரசின் உத்தரவுக்கு இணங்க 60 சதவீதம் அளவில் கன்னட எழுத்துகளில் பெயர்கள் எழுதப்பட வேண்டும் என்று அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

3. தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டமசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

4. கர்நாடகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கட்டாயக் கன்னடப் பாடத்தை தீவிரமாக அமல்படுத்துவது அவசியம்.

5. பிறமொழியை சேர்ந்த அமைப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் மற்றும் சலுகைகளை கர்நாடகத் தமிழர்களுக்கும் வழங்க வேண்டுமென அரசை கேட்டுக்கொள்கிறோம்.

6. வங்கிகள், அஞ்சலகங்கள், வருமானவரி துறை, தொழிற்சாலைகள் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

7. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை சிதைக்க முற்படும் சமூகவிரோதிகளின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

8. பள்ளிகளில் மூன்றாம் மொழியாக தமிழ் பாடத்தை கற்பிக்கவும், பாடப்புத்தகத்தை தயாரிக்கவும், தேர்வு நடத்தவும் அனுமதி அளித்து ஏற்கனவே பிறப்பித்திருக்கும் உத்தரவை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்துமாறு வேண்டுகிறோம்.

9. தட்சிண கன்னட மாவட்டத்தின் சுள்ளியா பகுதியில் தேயிலை, காபி, ரப்பர் தோட்டத்தில் கடினமான சூழலில் பணியாற்றி, வீடில்லாமல் தவித்து வரும் தமிழர்களுக்கு கர்நாடக வீட்டுவசதி வாரியத்தின் மூலம் உடனடியாக வீட்டுவசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

10. கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதில் நிலவி வரும் பாரபட்சத்தை களைந்து, உரிய ஜாதி சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும்.

11. போதுமான மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை கூறி, அரசு நடத்தி வரும் தமிழ் பயிற்றுமொழி பள்ளிகளை மூடக்கூடாது.

12. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக கன்னடத்தை ஏற்று, அதை உடனடியாக செயல்படுத்துமாறு மத்திய அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.

13. கோலார் தங்கவயலில் தங்கச்சுரங்கம் மூடப்பட்டதல் வேலையிழந்த தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலையை திறக்க வேண்டும். மூடப்பட்ட தங்கச்சுரங்கத்தை தன் பொறுப்பில் ஏற்று மீண்டும் திறக்குமாறும் கர்நாடக அரசை வேண்டுகிறோம்.

21. கர்நாடகத் தமிழர்களை அரசியல் நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபடுத்துமாறு இங்குள்ள அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அரசுக்கு...



1. வெளிமாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சத இடஒதுக்கீட்டை வழங்க சிறப்பு சட்டமசோதாவை கொண்டுவர வேண்டும்.

2. தமிழக அரசு சிறப்பாக நடத்தி வரும் அயலகத்தமிழர் நலத்துறையின் கிளையை பெங்களூரில் துவங்கி, அதன் வழியே அயலகத்தமிழர் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

3. கர்நாடகத் தமிழர்கள், நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைத்திட வேண்டும்.

4. தமிழக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவசதி, பேருந்தில் இலவசப்பயணம், காப்பீட்டு திட்டங்கள், ஓய்வூதியம் போன்ற அனைத்து அரசு சலுகைகளையும் கர்நாடகத்தில் பணியாற்றி வரும் தமிழ் பத்திரிகையாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கர்நாடக தமிழர்களுக்கு...


1. தமிழ் மொழியுடன் கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும்.

2. கன்னடக் கவிஞர் சர்வக்ஞரின் பிறந்தநாளை கர்நாடகத் தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும்.

3. மாவட்ட அளவிலான கன்னடர்- - தமிழர் ஒற்றுமை மற்றும் கலாசார மாநாடுகளை நடத்த வேண்டும்.

4. கர்நாடகத் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழர்களின் ஒத்துழைப்போடு, ஆங்காங்கே கடன் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க ஒருமனதாக தீர்மானிக்கிறது.

5. பெங்களூரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஆகஸ்ட் 9ம் தேதியை ஆண்டுதோறும் கன்னடர்- - தமிழர் நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும்.






      Dinamalar
      Follow us