ADDED : மார் 19, 2024 10:24 PM
புதுடில்லி:லோக்சபா தேர்தலின் போது மொபைல் போன் வாயிலாக எஸ்.எம்.எஸ் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக விஷமப் பிரசாரம் மற்றும் வதந்தி பரவுவதைத் தடுக்க டில்லி மாநகரப் போலீசில், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தேர்தல் அறிவித்ததில் இருந்தே, டில்லி மாநகரப் போலீஸ் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மொபைல் போன் வாயிலாக எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்திகள், பல்வேறு சமூக ஊடககள் வாயிலாக விஷமப் பிரசாரம் மற்றும் வதந்தி பரவுவதை தடுக்க, இணைக்  கமிஷனர் பி.எஸ். ஜெய்ஸ்வால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வதந்தியைப் பார்த்தால், 81300 99025 என்ற எண்ணில் பொதுமகக்ள் புகார் தெரிவிக்கலாம். மேலும், nodalsmmc.election24@delhipolice.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் அனுப்பலாம் என டில்லி மாநகரப் போலீஸ் தெரிவித்துள்ளது.

