கூட்டணி கட்சிகள் ஆளும் பீஹார் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்கள்
கூட்டணி கட்சிகள் ஆளும் பீஹார் ஆந்திராவிற்கு சிறப்பு திட்டங்கள்
ADDED : ஜூலை 23, 2024 01:35 PM

புதுடில்லி: மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீஹாருக்கும், தெலுங்கு தேசம் ஆட்சி செய்யும் ஆந்திராவிற்கும் மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பீஹார் மற்றும் ஆந்திராவிற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் பின்வருமாறு
பீஹார்
*பீஹாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு
*வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு
*விஷ்ணு பாதம், மகா போதி, ராஜ்கிர் ஜைன ஆலயம் ஆகிய வழிபாடு தலங்கள் மேம்படுத்தப்படும்.
*மாநிலத்தில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
*நெடுஞ்சாலை அமைக்க ரூ.20 ஆயிரம் கோடி
ஆந்திரா
*அமராவதி நகரை கட்டமைக்க ரூ.15 ஆயிரம் கோடி
*ஆந்திர பிரதேசம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர், மின்சாரம், ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களுக்கு சிறப்பு நிதி
*ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்படும்.
*ஆந்திரா, இரண்டாக பிரிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
சிறப்பு திட்டங்கள்
*பீஹார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மாநிலங்களை மேம்படுத்தி சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.