ADDED : ஜன 07, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: 'பயணியர் வசதிக்காக கும்ப மேளாவில் பங்கேற்பதற்காக, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடக்கும் கும்ப மேளாவில் பங்கேற்க, கூடுதல் ரயில்களை இயக்க, பயணியர் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஜன., 8ம் தேதி பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையத்தில் இருந்து பிரக்யாராஜுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜன., 8ல் ரயில் எண் 06577: பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையம் - பிரக்யாக்ராஜ் விரைவு சிறப்பு ரயில், விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, ஜன, 10 ம் தேதி மாலை 5:15 மணிக்கு பிரக்யாராஜ் சென்றடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

