உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
ADDED : ஜூலை 05, 2025 10:15 AM

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. காரில் திருமண விழாவிற்கு மணமகன் உட்பட ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது.
கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்தது. திருமண விழாவிற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்து மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.