
மைசூரு தசரா
விஜய தசமியை ஒட்டி அக்டோபர் 3 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை, மைசூரில் 10 நாட்கள் தசரா நடந்தது. இது 414 வது தசரா. 10 நாட்களும் மைசூரு நகரம் விழாக்கோலம் பூண்டது. தசராவை காண 12 லட்சம் முதல் 14 லட்சம் பேர் வந்தனர்.
50 ஆண்டுகள் நிறைவு
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36 வது பீடாதிபதியான ஸ்ரீஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சன்னிதானம் சன்னியாச தீட்சை பெற்று 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, கடந்த அக்டோபர் 26ம் தேதி, பெங்களுரு அரண்மனை மைதானத்தில் பொன்விழா நடந்தது. துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சுவாமிகள் வருகை
காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள், நவம்பரில் கர்நாடகாவுக்கு வருகை தந்தார். கடந்த நவம்பர் 9 ம் தேதி தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலுக்கும், நவம்பர் 20 ம் தேதி உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கும் சென்றார்.

