ADDED : ஜூன் 29, 2025 01:24 AM

அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் 1976ல், 'எமர்ஜென்சி' காலத்தின் போது, பார்லி.,யில் எந்த விவாதமுமின்றி அந்த முகவுரை தன்னிச்சையாக மாற்றப்பட்டது. நம் நாட்டை தவிர வேறு எந்த நாட்டின் அரசியலமைப்பு முகவுரையும் இதுவரை மாற்றப்பட்டதில்லை.
ஜக்தீப் தன்கர், துணை ஜனாதிபதி
தலைவிதியை தீர்மானிக்கும்!
நாட்டின் பிற பகுதிகளை விட, வட கிழக்கு பிராந்தியத்தில் தான் அதிக இளைஞர்கள் உள்ளனர். இது மிகப்பெரிய பலமாக இருந்தாலும், சவாலாகவும் உள்ளது. இளைஞர்களை நாம் எவ்வாறு வழிநடத்துகிறோம் என்பது நாகாலாந்து, மேகாலயா மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தின் தலைவிதியை தீர்மானிக்கும்.
கான்ராட் சங்மா மேகாலயா முதல்வர், தேசிய மக்கள் கட்சி
விரைவில் புதிய அரசு!
மணிப்பூரில் புதிய அரசை அமைக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். மக்கள் விரும்பும்படி, அந்த அரசு நிச்சயம் இருக்கும். கள நிலவரத்தை நன்கு ஆராய்ந்த பின், விரைவில் புதிய அரசை அமைப்போம். புதிய அரசு அமைவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி கட்சிகளும் ஒத்துழைப்பு தந்துள்ளன.
பைரேன் சிங், மணிப்பூர் முன்னாள் முதல்வர், பா.ஜ.,