தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பொய் தகவல் பரப்புவதா? அமைச்சர் எச்சரிக்கை!

பொய் தகவல் பரப்புவதா? அமைச்சர் எச்சரிக்கை!

பொய் தகவல் பரப்புவதா? அமைச்சர் எச்சரிக்கை!


ADDED : அக் 13, 2023 12:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2023 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டா,:''தவறான தகவல்களை அளிப்பது, பரப்புவது ஆகியவை நம் தேசத்துக்கு மிகவும் ஆபத்தானவை. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நம் எதிரிகளும், பிற நாட்டினரும், இங்கு சமூக பிரிவினை மற்றும் அமைதியின்மையை உருவாக்குகின்றனர்,'' என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டின் துவக்க விழாவில் அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் நேற்று பங்கேற்றார்.

அப்போது, 'நியூஸ்கிளிக்' செய்தி இணையதள விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் கூறியதாவது:

நம் நாட்டில் தற்போது, 83 கோடி பேர் இணையதளங்களை பயன்படுத்துகின்றனர். இது, 2025 - 26ம் ஆண்டில், 124 கோடியாக உயரும். இணையதள பயனாளர்கள் எண்ணிக்கை உயரும் போது, அதை பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் வைத்திருக்க அரசு உறுதி ஏற்றுள்ளது.

இதற்காக, 'சைபர்' குற்றங்கள், தவறான தகவல் பரிமாற்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான உள்ளடக்கங்களில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், தவறான தகவல்களை செய்தி, இணையதளங்கள் வாயிலாக பகிர்வது, இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

இதை பயன்படுத்தி, நம் நாட்டில் சமூக பிரிவினைகளையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்க நம் எதிரி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.இவற்றை கட்டுப்படுத்த தேவையான தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மற்றும் விதிகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இந்த விஷயத்தில் இணையதள ஊடகங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அவர்கள் அளிக்கும் தகவல்களை படிக்கும் பயனாளர், நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிராக தவறாக வழிநடத்தப்படவோ, துாண்டப்படவோ கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us