உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 17, 2026 10:05 PM
அ நிறம் | அளவு
கொழும்பு:
இலங்கை முழுதும் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது.
7 மணி நேரம் வரை நீடித்த மின்தடை காரணமாக, குடிநீர் வினியோகம், இணையதள சேவைகள் மற்றும் தொலைதொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் அனுரா கருணதிலகா கூறுகையில், ‘‘மின்பகிர்மானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒட்டுமொத்தமாக மின்தடை ஏற்பட்டது. நிலைமையை விரைவாக சீர்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன,’’ என்றார். நேற்றிரவு 7:00 மணி வரை மின் வினியோகம் சீராகததால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாகவே இந்த திடீர் மின்தடை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
