ஸ்ரீ புரந்தரதாசா, ஸ்ரீ கோபால கிருஷ்ணா பாகவத சுவாமி ஜெயந்தி நாமஸ்மரன் -சார்பில் மூன்று நாட்கள் கோலாகல கொண்டாட்டம்
ஸ்ரீ புரந்தரதாசா, ஸ்ரீ கோபால கிருஷ்ணா பாகவத சுவாமி ஜெயந்தி நாமஸ்மரன் -சார்பில் மூன்று நாட்கள் கோலாகல கொண்டாட்டம்
ADDED : அக் 23, 2024 11:02 PM

பெங்களூரு: 'நாமஸ்மரன் - 2024' சார்பில் 22ம் ஆண்டு ஸ்ரீ புரந்தரதாசா ஜெயந்தி மற்றும் ஸ்ரீ கோபால கிருஷ்ணா பாகவத சுவாமி ஜெயந்தி, நாளை முதல் 27ம் தேதி வரை கல்யாண் நகர் எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்டின் முதல் பிளாக்கின் ஸ்ரீ சுரபாரதி சமஸ்கிருத மற்றும் கலாசார அறக்கட்டளை நடக்கிறது.
முதல் நாள்
அக்., 25ல் புரந்தரதாசா ஜெயந்தியன்று, அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம்; 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தோடயமங்களம், குரு தியானம், மாயவரம் ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பாகவதரின் அஸ்டபதி; 2:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை அஸ்தபதி தொடர்ச்சியை தொடர்ந்து, கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதரின் பஞ்சபடி; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்ரீகாந்த் கவுண்டின்யா பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.
இரண்டாம் நாள்
இரண்டாம் நாளான 26ல் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தோடயமங்களம், குருதியானம், தஞ்சாவூர் தியாகராஜன் பாகவதரின் அஸ்டபடி, தாரங்கம்; 1:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சைதன்ய பஜனை மண்டலியின் தியான கீர்த்தனம்; 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திருவிசநல்லுார் ராமகிருஷ்ணன் பாகவதரின் பூஜை, திவ்யநாமம்; 9:00 மணி முதல் 10:30 மணி வரை புதுக்கோட்டை விக்னேஷ் பாகவதரின் டோலோற்சவம்.
மூன்றாம் நாள்
மூன்றாம் நாளான 27ல் கோபாலகிருஷ்ண பாகவதர் சுவாமி ஜெயந்தியை முன்னிட்டு, அன்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை புதுக்கோட்டை நரசிம்மன் பாகவதரின் உஞ்சவிருத்தி.
9:00 மணி முதல் 10:00 மணி வரை: மதுரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பிரம்மஸ்ரீ மஹாதேவன் பாகவதர், பிரம்மஸ்ரீ வெங்கட்ராமன் பாகவதர் ஆகியோருக்கு குருபூஜை நடத்தப்படுகிறது.
10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மதுரை ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், பஜனை வடிவில் ஸ்ரீராதா மாதவா கல்யாண உற்சவம் நிகழ்த்துகிறார்.
பகல் 2:30 மணி முதல் 3:30 மணி வரை ஆதிமூர்த்தி பாகவதரின் ஹனுமந்த் பிரபாவம்; 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை காயத்ரி மகேசின் பஜனை; 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதரின் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை, நாமஸ்மரன் நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 97390 84469, 98455 37677 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

