ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
ADDED : நவ 18, 2025 07:21 PM

புட்டபர்த்தி: ஸ்ரீசத்யசாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புட்டபர்த்தியில் நாளை (நவ.,19) நடக்கும் விழாவில், சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
ஸ்ரீசத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். புட்டபர்த்தியில் இவர் ஏற்படுத்திய ஸ்ரீ சத்யசாய் அறக்கட்டளை சார்பில் பிரமாண்ட இலவச மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் இன்றும் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இவரது போதனைகள் மற்றும் சேவையால் ஈர்க்கப்பட்டு பக்தர்கள் ஆகி வருகின்றனர்; பல்வேறு சேவைகளையும் செய்து வருகின்றனர்.
ஸ்ரீசத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் கோலாகலமாக நடக்கிறது. உலகின் 140 நாடுகளை சேர்ந்த பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர். நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்களில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
நாளை(நவ.,19) நடைபெறும் விழாவில் ஸ்ரீசத்யசாய்பாபா நினைவு தபால் தலை மற்றும் 100 ரூபாய் நாணயம் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.

