ஸ்ரீ சத்ய சாய் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ பல்கலை.,யில் கட்டுமான கவுன்சிலின் கற்றல் மையம் துவக்கம்
ஸ்ரீ சத்ய சாய் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ பல்கலை.,யில் கட்டுமான கவுன்சிலின் கற்றல் மையம் துவக்கம்
UPDATED : மே 27, 2025 11:30 AM
ADDED : மே 27, 2025 11:29 AM

போபால்: மத்திய பிரதேசத்தின் முன்னணி பல்கலைக்கழகமான ஸ்ரீ சத்ய சாய் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், கடந்த மே 24ம் தேதி கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலில் (CIDC) இணைக்கப்பட்ட முதல் தேசிய கற்றல் மையம் என்ற பெருமையை பெற்றது. இந்த கற்றல் மையத்தை சி.ஐ.டி.சி இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி.ஆர். ஸ்வரூப், அதன் தலைவர் டாக்டர் சுனில் கபூர் ஆகியோர் மூத்த அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானிகள், அனைத்து துறை மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தனர்.
மத்திய அரசின் திட்டக்குழு (தற்போதைய நிதி ஆயோக்) மற்றும் மத்திய அரசின் பல அமைச்சகங்கள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறையை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஆகியவற்றால் உச்ச அமைப்பாக செயல்பட இந்த கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (சி.ஐ.டி.சி) நிறுவப்பட்டது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த சி.ஐ.டி.சி பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
![]() |
ஸ்ரீ சத்ய சாய் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உடன் சி.ஐ.டி.சி, கொள்கையளவில் சில திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவை பின்வருமாறு:
* ஸ்ரீ சத்ய சாய் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (எஸ்.எஸ்.எஸ்.யு.டி.எம்) மாணவர்கள், முன்னணி தொழில்துறை நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செல்ல ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் அங்குள்ள செயல்முறை திட்டங்களை பற்றி மாணவர்கள் அறிய முடியும்.
* வரும் ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் பல முன்னணி நிறுவனங்களால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பிரமாண்டமான 'ரோஜ்கர் மேளா' ஏற்பாடு செய்யப்படும்.
* கள பொறியாளர்களுக்கான பி.வொக் எனப்படும் இளங்கலை தொழில் பட்டம் வழங்கப்படும்.
* பி.டெக் பிரிவில் அகழிகள் இல்லாத தொழில்நுட்பம் துவங்கப்படும்.
* சி.ஐ.டி.சி மற்றும் ஸ்ரீ சத்ய சாய் பல்கலை., ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளுடன் 10 சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு ஒத்துழைப்புடன், இளைஞர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் குழு, சி.ஐ.டி.சி பிரதிநிதிகளுடன் தான்சானியாவிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
* வரும் செப்டம்பர் 5ம் தேதி ஐ.சி.சி விருதுகள் விழாவை ஸ்ரீ சத்ய சாய் பல்கலை., நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
* பல்கலைக்கழக வளாகத்தில் தொழில் பூங்கா நிறுவப்படும்.
* பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படும் தொழில் பூங்காவிற்குள் ப்ரி காஸ்ட் உற்பத்தி யூனிட் நிறுவப்படும்.
* பல்கலைக்கழக ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
தொழில்துறை கல்வி தொடர்புகளை திறம்பட செயல்படுத்துவதை வலியுறுத்தும் 'தேசிய கல்விக் கொள்கை 2024'ன்படி, நமது இளைஞர்களுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட வேலைவாய்ப்புகளை அளிக்கவும், வளர்ச்சியை தூண்டுவதற்கும் சி.ஐ.டி.சி மற்றும் ஸ்ரீ சத்ய சாய் பல்கலை., இணைந்து இந்த கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.