வரும் 12ம் தேதி நடக்கிறது ஸ்ரீஸ்ரீஸ்ரீ பத்ரகிரியார் குருபூஜை
வரும் 12ம் தேதி நடக்கிறது ஸ்ரீஸ்ரீஸ்ரீ பத்ரகிரியார் குருபூஜை
ADDED : டிச 07, 2024 11:07 PM

பத்ராவதி: பத்ராவதி பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 12ம் தேதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பத்ரகிரியார் குரு பூஜை நடக்கிறது.
ஷிவமொக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமான பத்ராவதியில், பத்ரகிரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலை நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பத்ரகிரியாரின் குருபூஜை வரும் 12ம் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் பரணி தீப திருவிழாவும் நடக்கிறது. காலையில் விஸ்வரூப தரிசனம், விளா பூஜை, காலை சந்தி பூஜை, சிறுகாலை சந்தி பூஜை, மதியம் உச்சி கால பூஜை, மாலையில் தீபாராதனை, ஜோதி தரிசனம், இரவில் அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
வரும் 13ம் தேதி திருக்கார்த்திகை தீப திருவிழா, வரும் 14ம் தேதி விஷ்ணு தீப திருவிழா நடக்கிறது. இரண்டு நாட்களிலும் காலையில் விஸ்வரூப தரிசனம், விளா பூஜை, சந்தி பூஜை, சிறுகாலை சந்தி பூஜை, தீர்த்தவாரி, பிரசாதம் வழங்குதல், மாலையில் மங்கள ஜோதி தரிசனம், இரவில் கொடி இறக்கம், அர்த்தஜாம பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பத்ரகிரி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.