ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : மே 31, 2024 05:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: டில்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டில்லியில் இருந்து 177 பயணிகளுடன் விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் வந்தது. தொடர்ந்து, விமானம் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டனர். பிறகு, விமானம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.