ஜெகன் கட்சியில் ஸ்ரீராமுலு தங்கை ஆந்திராவில் போட்டி
ஜெகன் கட்சியில் ஸ்ரீராமுலு தங்கை ஆந்திராவில் போட்டி
ADDED : மார் 18, 2024 05:32 AM

முன்னாள் எம்.பி.,யும், பல்லாரி பா.ஜ., வேட்பாளருமான ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். வெற்றி பெறுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
கர்நாடகா பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு. இவரது சகோதரி சாந்தா, 50. கடந்த 2009 முதல் 2014 வரை, பல்லாரி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தார். கடந்த 2018ல் பல்லாரி லோக்சபா தொகுதிக்கு நடந்த, இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இதையடுத்து கணவரின் சொந்த ஊரான, ஆந்திராவின் ஹிந்துப்பூரில் வசித்து வந்தார்.
கடந்த ஜனவரி 2ம் தேதி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசில் இணைந்தார். அவருக்கு ஹிந்துப்பூர் லோக்சபா தொகுதி 'சீட்' கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வெளியான பட்டியலில், ஹிந்துப்பூர் தொகுதி வேட்பாளராக சாந்தா அறிவிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

