எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., தேர்வு அட்டவைணை வெளியீடு
எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., தேர்வு அட்டவைணை வெளியீடு
ADDED : ஜன 11, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு -மார்ச் 21 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையும்; பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வு, மார்ச் 1ம் தேதி முதல், மார்ச் 20ம் தேதி வரையும் நடக்கிறது. ஏற்கனவே, கடந்த டிசம்பரில் உத்தேச தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க, டிசம்பர் 16ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்கான இறுதி அட்டவணையை கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.