பொது சிவில் சட்டத்தின் அடையாளமாக புதிய நீதி தேவதை சிலை : உச்சநீதிமன்ற நூலகத்தில் திறப்பு
பொது சிவில் சட்டத்தின் அடையாளமாக புதிய நீதி தேவதை சிலை : உச்சநீதிமன்ற நூலகத்தில் திறப்பு
ADDED : அக் 16, 2024 08:25 PM

புதுடில்லி: ‛சட்டம் குருடு அல்ல'' என்ற வாசகத்துடன் புதிய நீதி தேவதை சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் இன்று ( அக்.,16) திறந்து வைத்தார்.
நம் நாட்டின் நீதிமன்றத்தில் அடையாளமாக நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கிறது. இது உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்த்து நீதி வழங்கிட கூடாது என்பதையும், சரியான எடை போட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை உணர்த்தவும், அநீதியை வீழ்த்திட வாளும் நீதிதேவதையின் அடையாளமாக கருதப்படுகிறது.
இந்த அடையாளத்தை மாற்றும் விதமாகவும் ‛சட்டத்தின் முன் சமத்துவம் ' என்பதை வலியுறுத்திட இன்று ( அக்.,16) உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.
கறுப்பு துணி அகற்றம்
1)இப்புதிய நீதிதேவதை சிலை சொல்லும் செய்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‛சட்டம் குருடு அல்ல ' என்பதையும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்திட நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறிக்கிறது. எனவே சட்டம் ஒருபோதும் குருடாகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்ந்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.
அரசியல் சாசன புத்தகம்
2)இடது கையில் தராசுக்கு பதிலாக நம் அரசியல் சாசன புத்தகம் நம் நாட்டின் நீதிமன்றங்கள் அரசியலமைப்புச் சட்டங்களின்படி நீதி வழங்குகின்றன என்பதை வலியுறுத்துகிறது.
நியாய தராசு
3) நம்சமூகத்தில் சமநிலையை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், இரு தரப்பு உண்மைகளும் வாதங்களும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு நீதிமன்றங்களால் எடைபோடப்படுகின்றன என்ற கருத்தையும் வலியுறுத்தவே வலது கையில் நீதியின் தராசு உள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்ற அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், நாம் நாட்டை ஆண்டஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களில் பரவலான மாற்றம் கொண்டு வரப்பட்டு கடந்த ஜூலை-1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் உத்தரவின் பேரில் உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் நூலகத்தில் புதிய சிலை, கண்களைத் திறந்து, இடது கையில் வாள் மாற்றப்பட்டு அரசியலமைப்புச் சட்ட புத்தகம், என புதிய நீதி தேவதை சிலை வைக்கப்பட்டுள்ளது முன் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்திய தண்டனை சட்டம் போன்று காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை பாரதீய நியாய சன்ஹிதாவுடன் மாற்றியமைத்தது போல், காலனித்துவ பாரம்பரியத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பொது சிவில் சட்டத்தின் அடையாளம்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து பிரிவு மக்களுக்கும் ஏற்ற வகையில், நாடு தழுவிய அளவில் பொது சிவில் சட்டம் அமலாகும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்டமாக பா.ஜ., கட்சி ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில், பொது சிவில் சட்டம் அமலாகி உள்ளது.அதன் மாதிரி வரை அடைப்படத்தில் ‛‛ஒற்றுமை மூலம் சமத்துவத்தை வளர்ப்போம்'' என்ற வாசகத்துடன் உள்ள சிலை தான் தற்போது உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.