தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ உருக்காலை வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலி

 உருக்காலை வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலி

 உருக்காலை வெடி விபத்து 6 தொழிலாளர்கள் பலி


ADDED : ஜன 23, 2026 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பலோடபஜார்: சத்தீஸ்கரில் உருக்காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஆறு தொழிலாளர்கள் பலியாகினர். மேலும், ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் பலோடபஜார் - பட்டாபாரா மாவட்டத்தின் பக்குலாஹி பகுதியில் 'ரியல் இஸ்பாட் அண்ட் பவர் லிமிடெட்' என்ற தனியார் உருக்காலை இயங்கி வருகிறது.

இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியாற்றி வந்தனர். அப்போது, இத்தொழிற்சாலையின் கழிவுகள் வெளியேறும் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது, சூடான நிலையில் வெளியேறிய கழிவுகள் தொழிலாளர்கள் மீது சிதறியதில் தீக்காயம் ஏற்பட்டு ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் ஐந்து பேர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us