ஒருபக்கம் ரயில் வருது! அங்கிருந்து கல் வருது! மர்ம நபர்கள் அட்ராசிட்டி
ஒருபக்கம் ரயில் வருது! அங்கிருந்து கல் வருது! மர்ம நபர்கள் அட்ராசிட்டி
ADDED : செப் 24, 2024 10:39 AM

பிரக்யாராஜ்; உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பயணிகள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் திடீர் பதற்றம் உருவானது.
புதுடில்லியில் இருந்து கயாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஏராளமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. யமுனை பாலம் அருகே மிர்சாபூர் ரயில்நிலையத்தில் நுழையும் போது எங்கிருந்தோ பறந்து வந்த கற்கள் ரயில் மீது விழுந்தன.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கற்கள் வீசப்பட்ட போது நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்வீச்சு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 10ம் தேதி பீகார் மாநிலம் கயாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்கள் வீசப்பட்டது, குறிப்பிடத்தக்கது. தொடரும் இதுபோன்ற சம்பவங்களினால் ரயில் பயணிகள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

