கரையை கடந்தது டானா புயல்; 120 கி.மீ., வேகத்தில் வீசியது 'பேய்க்காற்று'
கரையை கடந்தது டானா புயல்; 120 கி.மீ., வேகத்தில் வீசியது 'பேய்க்காற்று'
ADDED : அக் 25, 2024 06:11 AM

வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கத் தொடங்கியது. 5 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிந்த டானா புயல், ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே இன்று காலை கரையை கடக்கும் எனவும், அப்போது கனமழையுடன், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
டானா புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அடை மழை கொட்டியது. இந்நிலையில், டானா புயல், நள்ளிரவு 12 முதல், ஒடிசா வடக்கு கடற்கரை பகுதியில், பிதர்கனிகா - தாம்ப்ரா இடையே கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
5 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோல்கட்டா வானிலை மையத்தில், இரவு முழுவதும் புயல் மீட்பு பணிகளை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி ஆய்வு செய்தார்.
புயல் மீட்பு படையில், இந்திய கடற்படை ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.