
பண்டிகை காலங்களில் பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் நபர்களை, எதிர்கால சந்ததியினர் எப்போதும் மன்னிக்க மாட்டர்; அதற்குரிய விலையை அவர்கள் அளிக்க நேரிடும். இதுபோல் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
யோகி ஆதித்யநாத் உ.பி., முதல்வர், பா.ஜ.,
நம்பிக்கை இழப்பு!
பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் இருக்கும் ஆம் ஆத்மி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக இழப்பீட்டுத் தொகையை அளிக்கிறது.
பி.எல்.வர்மா மத்திய இணையமைச்சர், பா.ஜ.,
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு!
பீஹாரில் கல்வி, நில உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் ஏற்றத்தாழ்வு நிறைந்துள் ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு மாநில அரசு உரிய நிதி ஒதுக்காததால், அவர்களில் டாக்டர்கள், இன்ஜினியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்