ADDED : பிப் 13, 2025 05:22 AM

காடுகோடி: தேர்வுக்கு ஒழுங்காக படிக்கும்படி தாய் அறிவுரை கூறியதால், அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து குதித்து, பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு காடுகோடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதி வசிக்கின்றனர்.
இவர்களது மகள் அவந்திகா, 15. தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த, அவந்திகா பாடம் படிக்காமல் இருந்து உள்ளார். இதை அவரது தாய் கண்டித்தார்.
அடுத்த மாதம் பொது தேர்வு நடக்க உள்ளதால், ஒழுங்காக படிக்கும்படி அறிவுரை கூறினார். இதனால் தாய் - மகள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவந்திகா, அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து இறந்தார். காடுகோடி போலீசார் விசாரிக்கின்றனர்.

